மகா சிவராத்திரி நகர்வலம் – 2022 அன்பார்ந்த அடியார்களே நகர்வல விஞ்ஞாபனம் 02.03.2022 – 06.03.2022

முதலாம் நாள்:

02.03.2022 புதன்கிழமை – கோணேசப்பெருமான் ஆலயத்திலிருந்து புறப்பட்டு அருள் மிகு பாலையூற்று முருகன் ஆலயத்தை அடைந்து விஷேட அபிஷேக ஆராதனைகளுடன் தரித்திருப்பார்.

இரண்டாம் நாள் :

03.03.2022 வியாழக்கிழமை கோணேசப்பெருமான் அருள்மிகு பாலையூற்று முருகன் ஆலயத்திலிருந்து புறப்பட்டு தெற்கு அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தை வந்தடைந்து விஷேட அபிஷேக ஆராதனைகளுடன் தரித்திருப்பார்.

மூன்றாம் நாள் :

04.03.2022 வெள்ளிக்கிழமை கோணேசப்பெருமான் அருள்மிகு தெற்கு துர்க்கை அம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்டு அருள்மிகு விஸ்வநாதன் (சிவன்) ஆலயத்தை வந்தடைந்து விஷேட அபிஷேக ஆராதனைகளுடன் தரித்திருப்பார்.

நான்காம் நாள் :

05.03.2022 சனிக்கிழமை கோணேசப்பெருமான் பி.ப.5.30 மணிக்கு அருள் மிகு விஸ்வநாதன் (சிவன்) ஆலயத்திலிருந்து புறப்பட்டு இடது பக்கம் திருஞானசம்மந்தர் வீதி (நிறைகுடங்கள் எடுக்காமல்) மடத்தடிச் சந்திஇ மத்திய வீதி மணிக்கூண்டு கோபுரம் வலது பக்கம் டொக்யாட் வீதி. வலதுபக்கம் பிரதான வீதி அருள்மிகு ஞானவைரவர் சுவாமி திருக்கோயில் கடற்காட்சி வீதிச்சந்திவரை சென்று திரும்பி வலதுபக்கம் மாணிக்கவாசகர் வீதி அருள் மிகு கும்பத்துமாள் கருமாரி அம்மன் ஆலயம்இஅருள்மிகு பேச்சியம்மன் ஆலயம்இ இடது பக்கம் அருள் மிகு தெய்வானைப் பிள்ளையார் ஆலயம்இ இடது பக்கம் திருமால் வீதி ஊடாக அபான்ஸ் சந்தியை அடைந்து இடதுபக்கம் கடற்காட்சி வீதி இடது பக்கம் தில்லைநகர் ஊடாக வலது பக்கம் உட்துறைமுக வீதிஇகடற்காட்சி வீதிஇ இடது பக்கம் பிரதான வீதிஇ அருள்மிகு சமாது தங்க விநாயகர் ஆலயம்இ இடது பக்கம் அருள்மிகு மடத்தடி முத்துமாரியம்மன் ஆலயம்இ அருள்மிகு விஸ்வநாத சுவாமி (சிவன்) ஆலயம்இஅருள் மிகு கற்பகப் பிள்ளையார் ஆலயம்இ அருள் மிகு முத்துக்குமாரசுவாமி ஆலயம் இடது பக்கம் இராஜவரோதயம் வீதி வலதுபக்கம் வித்தியாலயம் வீதி ஊடாக அருள் மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தை வந்தடைந்து ஞாயிற்றுக்கிழமை 06.03.2022 மாலை 5.00 மணிவரை விஷேட அபிஷேக ஆராதனைகளுடன் தரித்திருப்பார்.

ஐந்தாம் நாள் :

06.03.2022 ஞாயிற்றுக்கிழமை கோணேசப் பெருமான் அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை தமது இருப்பிடத்தை சென்றடைவார்