திருக்கோணேச்சரத்தின் மிக முக்கியமான வரலாற்று அம்சங்களைக் கொண்ட இலக்கிய வடிவம் கோணேசர் கல்வெட்டு.
கோணேசர் கல்வெட்டு ஏலவே நூல் வடிவில் கிடைக்கின்ற போதும் ஒரு ஆய்வு தேவைக்காக அதன் ஓலைச்சுவடிகளை நீண்ட காலம் தேடிக்கொண்டிருந்தேன்.
முதலாம் இராஜராஜனின் திருக்கோணேச்சரக் கல்வெட்டை மீளப்படியெடுப்பதற்காகச் சென்ற வேளை கோணேசர் கல்வெட்டின் ஓலைச்சுவடிகளை திருக்கோணேச்சர ஆலய பரிபாலன சபையின் தலைவர் சட்டத்தரணி தி. துஷ்யந்தன் அவர்களிடமிருந்து சுவடியாக்கம் செய்வதற்காகப் பெற்றுக்கொண்டேன்.
தற்பொழுது அவை நூலகத் திட்டத்தினால் (noolaham.org) சுவடியாக்கம் செய்யப்பட்டு வருகிறது. மிக விரைவில் அனைவரும் இலவசமாக தரவிறக்கி வாசிக்கும் வண்ணம் அவை நூலகத் திட்டத்தினால் பதிவேற்றப்படும்.
திருக்கோணேச்சரம் தொடர்பான கீழ்வரும் ஓலைச்சுவடிகளை PDF வடிவில் நூலகத் திட்டத்தில் இருந்து இலவசமாகத் தரவிறக்கி ஆர்வமுள்ளவர்கள் தங்கள் ஆய்வுத் தேவைக்கு பயன்படுத்தலாம்.
திருக்கோண நாதர் மும்மணிமாலை
http://www.geevanathy.com/2023/03/pdf.html
திருகோணமலை அந்தாதி
http://www.geevanathy.com/2022/09/1886-pdf.html
நட்புடன் ஜீவன்.



