திரு.கணேசலிங்கம் ஸ்ரீதரன் அவர்களின் ஓலைச்சுவடிச் சேகரிப்பில் இருந்த திரிகோணமலை அந்தாதியினை தற்போது நூலக நிறுவனத்தினர் PDF வடிவில் பதிவேற்றி உலகிலுள்ள அனைவரதும் பார்வைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

திரிகோணமலை அந்தாதி திருக்கோணேசர் மேல் பாடப்பட்ட அந்தாதி நூலாகும். திருகோணமலை சிதம்பரநாதர் சுப்பிரமணீயனார் என்னும் புலவரின் புதல்வரும் ஆறுமுக முதலியார் என்று அழைக்கப்பட்டவருமான புலவர் சு. ஆறுமுகம் என்பவரால் 1886 ஆம் ஆண்டளவில் இந்நூல் பாடி முடிக்கப்பட்டது. திரிகோணமலை அந்தாதி 1990 இல் இந்து கலாசார அமைச்சினால் மீள் பதிப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. (http://www.geevanathy.com/2022/09/1886-pdf.html)