1961ஆம் ஆண்டு இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டபோதும் 1972 ஆம் ஆண்டிலேயே இச்சாசனத்தின் முக்கியத்துவம் உணரப்பட்டது. சாம்பல்தீவு கிராமச்சங்கத் தலைவர் திரு.நா.தம்பிராசா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பேராசிரியர் செ.குணசிங்கம் அவர்களால் படியெடுத்து வாசிக்கப்பட்ட இச்சாசனம் இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தியின் ஆரம்பப் பகுதியைக் கொண்டிருக்கிறது.

1.(குடமாலை) நாடுங் கொல்லமு(ம்)
2._ பொழில்
3.___
எண்டிசை (புகழ்)
4.(நர ஈழமண்)டலந் நின்
5.(டிறல் வென்றித்த) ண்டாற கொண் (டதன்)
6.(னெழில் வள)டூழியுள் ளெ(ல்ல யான்)
7.(டுந்தெ)ழுநம விள(ங்கும் யான்)
8.(டெய் செ)ழியரைத் நே(சு கொண்)
9.(கோ)ராஜ கேசரி வ(ர் மரான)

இச்சாசனம் இலங்கையில் கிடைத்த காலத்தால் முந்திய சோழசாசனமாகக் (கி.பி .993க்கு முன்) கருதப்படுகிறது.

நீண்டகாலமாகத் தேடி அண்மையில் சட்டத்தரணி தி. துஷ்யந்தன் (  தலைவர் ,  திருக்கோணேச்சர ஆலய பரிபாலன சபை ), ஆலயப் பூசகர், திரு. ப. பாக்கியராஜா, செல்வன் ஜீ .அனந்தன் ஆகியோரின் துணையுடன் இக்கல்வெட்டினைத் தரிசிக்க கிடைத்தது.

இலங்கைத் தமிழர் வரலாற்றில் ஆர்வமுள்ளோர் இணைந்து திருக்கோணச்சரத்தின் வரலாற்றுப் பொக்கிஷங்களை ஆலயவளாகத்தில் அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க முன்வரவேண்டும்.

நட்புடன் ஜீவன்.